Tuesday, January 18, 2005

I have Nokia 6610i .... how can I send Tamil SMS?


வெளியீட்டு விழா முடிந்ததிலிருந்து இது போன்ற கேள்விகள் தொலைபேசி மூலமாகவும், மின்-அஞ்சல் மூலமாகவும் ஆங்கிலக் கூறுஞ்செய்திகள் மூலமாகவும் எங்களுக்கு வந்து சேர்கின்றன.

நேரடியாக பல பயணாளர் நண்பர்களைச் செந்தித்தபோது, பல மாடல்களைக் கொண்டுவந்து, இதில் தமிழ் செய்யலாமா என்று கேட்கும்போது, "இதில் முடியாதுங்க..." என்று அரம்பிப்பதற்கே மிகவும் சிறமமாக இருந்தது.

உண்மை நிலையும் அதுதான். எல்லா செல் பேசிகளிகும் செல்லினச் செயலிகள் இயங்காது - புதிய வகை செல்பேசிகள், அதுவும் JAVA MIDP 2.0 தொழில்நுட்பம் அடங்கிய செல்பேசிகளில்தான் இயங்கும். இதைத் தவிர, முழுமௌயான குறுஞ்செய்தியை தமிழில் அனுப்புவதற்கு வேறு வழி இல்லை. காலப்போக்கில் புதிய செல்பேசிகள் அதிக புழக்கத்திற்கு வரும் என்பதில் ஐயமில்லை.

செல்லினம் - குறிப்பாக குறுஞ்செய்திச் சேவை (SMS) இயங்கும் செல்பேசி வகைகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்:

http://www.murasu.com/mobile/phonematrix.html

~ முத்து.

4 Comments:

Blogger Vijayakumar said...

முத்து அவர்களே, மிகச் சிறந்த ஆக்கத்திற்கு நன்றிகள் பல. என் ஆர்வக் கோளாரினால் உங்களிடம் சிலக் கேள்விகள்.

1. புதியதாக சந்தைக்கு ஒன்று வந்தால் அதை மாதிரியே பலப் பொருட்கள் சந்தைக்கு வரலாம்.சந்தைக்கு வரும் எல்லாவற்றையும் நாம் குறைச் சொல்ல முடியாது என்று வைத்துக் கொள்வோம். அதேப்போல் ஒன்றுக்கொன்று தரத்தில் குறைந்தது இல்லை எனவும் வைத்துக் கொள்வோம். அது வியாபாரத்துக்கு வேண்டுமானால் போட்டியாக இருக்கலாம். இது வியாபாரத்துக்கு மிக மிக ஆரோக்கியமான விசயம். ஆனால் தமிழுக்கு சேவை என்ற அளவில் அந்த நோக்கம் பலர் முயற்ச்சியால் சிதறடிக்கப்படுகிறது.எடுத்துகாட்டு எழுத்துருக்களினால் நடந்த போர்கள். ***Open Source*** என்றக் கூற்றுப்படி ஒரு குடையின் கீழ் இந்த தமிழ் தொழில் நுட்பத்தை கொண்டுவரும் எண்ணம் உண்டா? (பலருடைய அறிவும் ஒருங்கே ஒரு பாதையில் செலுத்தப்பட்டால் பல கண்டுபிடிப்பு அற்புதங்கள் நிகழ வாய்ப்பு உள்ளன.)

2. தமிழ் நாட்டில் அண்ணா பல்கலைகழகத்துடன் இந்த தொழில் நுட்பத்திற்காக இணைந்துப் பணியாற்றுகிறீர்கள் என கேள்விப்பட்டேன். நன்று. தமிழ் இணையமாநாடுகளைப் பற்றிக் கேள்விப் படாதா ஒரு தொழில் நுட்பர் இதே முயற்ச்சியை மேற்கொள்கிறார் என்றால் **Reinventing Wheel** என்றக் கூற்றுப் படி இல்லாமல் இருக்க என்ன முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும்?

3. செல்பேசிகளில் தமிழ் சந்தை பெருகினால் செல்பேசி கம்பெனிகள் தங்கள் செல்பேசி மாடல்களில் தமிழை எப்படி புகுத்தப் போகிறார்கள்? மைக்ரோசாப்ட் போன்ற ஜாம்பவான்கள் எழுத்துருக்களில் செய்தது போன்று இது தான் யூனிகோட் என் விண்டோஸில் என்று சொல்லிவிட்ட போதே, நாம் மறுபேச்சி பேசாமல் அதை நோக்கி ஓட வேண்டியதாகி விட்டது. இந்த செல்பேசி துறையிலும் இது நடக்கலாமென நினைக்கிறேன். நாம் எப்படி அதை கையாளப் போகிறொம்? (தமிழிணைய மாநாடுகள் முடிவாக இருக்காலாம். அது சென்றடையும் தூரம் குறைவாகவே இருப்பதாக என் கருத்து. ஒரு வேளை என் ஈடுபாடு குறையாகக் கூட இருக்கலாம். ஆனால் அதைப் பற்றிய கட்டுரைகள் அல்லது கருத்துக்கள் எல்லாமே எனக்கு தமிழ் செய்யுள் படிப்பதைப் போன்ற உணர்வே.)

என் உள்ளத்தில் உள்ள கேள்விகள். உங்களுக்கு நேரம் இருக்கும் போது பதிலளித்தால் போதுமானது.

உண்மையில் தமிழ் தொழில் நுட்பத்திற்கு நீங்கள் வழிகாட்டியாக இருப்பதில் நான் பெருமையடைகிறேன்.

18 January 2005 at 18:51  
Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

நல்ல முயற்சி.. தொடர்ந்து வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்

18 January 2005 at 23:11  
Blogger Muthu said...

அன்புள்ள விஜய்,

இதுவரை நூற்றுக்கணக்கானோர் ஆவலின் பேரில் தங்களைப் போன்றே கேள்விகளை எழுப்பியுள்ளனர். அவை அனைத்தையும், உங்கள் கேள்விகளையும் நாங்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

முரசு என்பது ஒரு வணிக நிறுவணம். இதில் எந்த மாற்றமும் கிடையாது :-).

இதுபோன்ற ஒரு நிறுவனம், தங்களின் வாடிக்கயாளர்களுக்குத் தரும் சேவையைத்தன் பிரதான செயலாகக் கொண்டிருக்க வேண்டும். சற்றும் எதிர்பாராத ஆதரவு கிடைத்திருக்கும் இவ்வேளையில், எங்கள் ஆற்றல், நேரம், ஊழியர்கள் எல்லோரையும் இந்தச் சேவையிலேயே கவணத்தைச் செலுத்துமாறு வேண்டியுள்ளோம்.

தேவையறிந்து இந்த நேரத்தில் எங்களுக்கு உதவி செய்ய வரும் நண்பர்களுக்குத் தேவையான தகவல்களையும் சேகரித்துக் கொடுத்து வருகிறோம்.

இவையே இப்போதைக்கு எங்களுக்கு உள்ள தலையாயக் கடமை.

இருதாலும், தமிழ்த் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எங்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை என்றென்றும் மறந்துவிடவில்லை. நேரம் கிடைக்கும் போது, கண்டிப்பாக உங்களைப் போன்ற நண்பர்களின் ஐயங்களைத் தீர்ப்பொம்.

இப்போதைக்கு ஒன்றை மட்டும் பொதுவாகக் கூற விரும்ப்புகின்றேன்.

தமிழில் மின்-அஞ்சல் பரிமாற்றம் இல்லாதபோது, முரசு அஞ்சல் செயலியை நாங்கள் தான் வெளியிட்டோம் எனபது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்போது, தகுதரம், யூனிகோட் போன்ற பொதுவான குறியீட்டு முறைகள் இல்லை. இந்த பொது குறியீட்டு முறை வந்ததும், தேவையின் அடிப்படியில் அறிமுகப் படுத்திய "அஞ்சல்" குறியீட்டுமுறையை பயன்பாட்டில் இருந்து அகற்றியதும் நாங்கள்தான். இந்த இரண்டு குறியீட்டு முறைகளையும் செயலிகளுக்குக் கொண்டுவந்த முதலாவது அனைதுலகத் தமிழ் மென்பொருள் நிறுவனமும் நாங்கள் தான்!

செல்லினம் எங்கள் செயலி என்றாலும் - தமிழ் உலகப் பொதுச் சொத்து. இந்தச் செம்மொழி எங்கள் கடையில் தான் கிடைக்கும் என்ற நிலை என்றுமே வந்ததில்லை - இனியும் வராது.

விரிவான விளக்கங்களை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

முத்து.

19 January 2005 at 13:36  
Blogger Vijayakumar said...

முத்து அவர்களே,

அருமை. என்னை போன்ற சாமானியர்களுக்கும் நீங்கள் மதிப்பு கொடுத்து பதிலளிக்கும் போது உங்கள் மீதுள்ள மதிப்பு மீண்டும் உயரத் தான் செய்கிறது. நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுங்கள் அய்யா. எதிர்பார்ப்புடன்.....

19 January 2005 at 19:51  

Post a Comment

<< Home